தேசிய செய்திகள்

மணிப்பூரில் பதற்றம்; குண்டுவீசி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகொலை

அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருக்க கூடும் என முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இம்பால்

மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில், வீடு முற்றிலும் பாதிப்படைந்து உள்ளது.

இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மலை சரிவில் இருந்து கிராமத்திற்குள் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளதுடன், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன.

பக்கத்திலுள்ள கிராமங்களை கண்காணிக்கும் பணியுடன், அருகேயுள்ள மலை பிரதேசங்களில் தேடுதல் பணிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, அகாம்பத் நிவாரண முகாமில் இருந்த 7 வயது சிறுமி நேற்று காணாமல் போன நிலையில், சந்தேகத்திற்குரிய சூழலில், சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருக்க கூடும் என முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. 3 சிறுமிகள் படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் மீண்டும் நடைபெற கூடும் என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர்.