புல்வாமா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திரால் நகரில் பேருந்து நிலையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) மீது பயங்கரவாதிகள் திடீரென எறிகுண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் எறிகுண்டு வானில் வெடித்து சிதறியுள்ளது. இந்த தாக்குதலில், பொதுமக்களில் 7 பேர் காயமடைந்தனர் என சி.ஆர்.பி.எப். வட்டாரம் தெரிவித்து உள்ளது.
இதில், காயமடைந்த நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.