தேசிய செய்திகள்

குல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம்!

பாதுகாப்புப் படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குல்காம்,

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள அக்ரன் பகுதியில் பாதுகாப்புப் பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டை தீவிரம்

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT