புதுச்சேரி,
புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் நேற்று ரெட்டி யார்பாளையத்தில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 2 1/2 கிலோ தங்க நாணயங்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடியே 60 லட்சம் ஆகும்.
இதேபோல் ரூ.1 கோடியே 77 லட்சம், 81 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள், பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தான் முழு விவரங்கள் தெரிய வரும்.