தேசிய செய்திகள்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி விறுவிறுப்பாக நடந்தது.

புதுச்சேரி,

தட்டாஞ்சாவடி தொகுதி

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் (அசோக் ஆனந்த்), காங்கிரஸ் (விநாய கம்). தி.மு.க. (சேது செல்வம்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சலீம்), நாம் தமிழர் கட்சி (கார்த்தி குமாரி) உள்பட 11 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி விறுவிறுப்பாக நடந்தது.

இந்த தேர்தலில் 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத் தம் 21 ஆயிரத்து 756 பேர் வாக்களித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலின் போது தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன. முதல் 3 சுற்றுகளில் தலா 8 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளும், 4-வது சுற்றில் 7 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்தன் 6,885 வாக்குகள் பெற்றுள்ளார்.

2-வது சுற்று முடிவில் பெறப்பட்ட வாக்குகள்:-

என் ஆர் காங்கிரஸ்- 6,885

திமுக- 1,526

காங்கிரஸ்- 2,366

இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 168

நாம் தமிழர் கட்சி- 98

நோட்டா-106

SCROLL FOR NEXT