தேசிய செய்திகள்

ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய கடற்படை தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடற்படை போர் கப்பல்கள் அரபிக்கடலில் இருந்து பாகிஸ்தான் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்தும், நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்தும் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.