பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா அல் லகெரே கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 40). இவரது மனைவி காவ்யா (வயது 30). இந்த தம்பதிக்கு ஜீவன் (10), பிரா னேஷ் (6) என்ற 2 மகன்கள் இருந்தனர். சிவண்ணா அப்ப குதியில் உள்ள மல்லேசுவரா சாமி கோவிலில் அர்ச்சகராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் காவ்யாவுக்கும். சிவண்ணாவின் அக்காள் (மைத்துனி) மகன் ஹேமந்த் என்ற வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அறிந்த குடும்பத்தினர் காவ்யாவை கண்டித்து உள்ளனர்.
இதனால் கடந்த வாரம் காவ்யா, தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியிருந்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவ்யா, ஹேமந்தை தேடி வந்தனர். இதனால் 2 நாட்களுக்கு முன்பு காவ்யா வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு வீட்டில் இருந்த நகைகள், பணத்தை எடுத்துக்கொண்டு காவ்யா மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தால் சிவண்ணா மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் சிவண்ணா, அவரது மகன்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேக மடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சோபாவில் ஜீவன், பிரானேஷ் ஆகியோர் பிணமாகவும், சிவண்ணா தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குனிகல் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குனிகல் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவண்ணா, 2 மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் காவ்யாவின் தொல்லையால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிவண்ணாவின் தாய் ஹொன்னம்மா கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி கள்ளக்காதலனு டன் ஓடியதால் 2 மகன்களை கொன்று அர்ச்சகர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.