ராய்ச்சூர்,
ராய்ச்சூரில் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து ரூ.200-க்கு விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. அவற்றை விலைக்கு வாங்கிய தனியார் மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் 2 பேரி டம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ராய்ச்சூர் மாவட்டம், டவுன் மந்த்ராயலா சாலையில் இந்து மக்களுக்கான சுடுகாடு உள்ளது. அங்கு புதைக்கப்படும் பிணங்கள் மற்றும் எலும்புக்கூடுகளை சிலர் சட்டவிரோதமாக தோண்டி எடுத்து தனியார் மருத்துவக்கல்லூரிக்கு விற்று வருவதாக புகார்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி பிணங்களை துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களையும் விற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. அதுமட்டுமின்றி ரூ.200 முதல் ரூ.500 கொடுத்தாலே உடல்கள், எலும்புக்கூடுகள், உடல் பாகங்களை வெட்டி எடுத்து கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ராய்ச்சூரில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் தனியார் மருத்துவக்கல் லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்விக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந் ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அந்த சுடுகாட்டுக்கு சென்று ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த ராஜு, அப்சர் ஆகிய 2 ஊழியர்கள் வந்து புதைக்கப்பட்டு இருந்த 2 பிணங் களை சுடுகாட்டில் இருந்த சிலரின் உதவியுடன் தோண்டி எடுத்து விலைக்கு வாங்கினர். இதையடுத்து அவர்களை போலீசாரும், அரசு அதிகாரிகளும் கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பிணங்கள், உடல் பாகங்கள், எலும்புக்கூடுகளை சட்டவிரோதமாக வாங்கி வந்ததும், இதை நீண்ட நாட்களாக செய்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நேதாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.