தேசிய செய்திகள்

டி.கே.சிவக்குமார் தலைமையில் வருகிற 2-ந் தேதி மந்திரிசபை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் பதவி ஏற்றுள்ளார். அவருடன், 13 மந்திரிகளும் பதவி ஏற்றுள்ளனர். பதவி ஏற்பு விழா நடைபெற்ற கடந்த 3-ந் தேதியே டி.கே.சிவக்குமார் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றிருந்தது.

மந்திரிசபை கூட்டம்

அதன்பிறகு, கடந்த 20-ந் தேதி 2-வது முறையாக நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதாவது மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பொதுசேவை துறை தனியாக தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக மந்திரிசபை கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி நடைபெறும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரிசபை கூட்டத்திலும் சில முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.