புதுடெல்லி,
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-
5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்குப்பின் இந்த தேர்தல் நடைபெறுகிறது.
உங்கள் ஓட்டு உங்கள் உரிமை என்பதை மனதில் நிறுத்தி முதல்முறையாக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடத்தப்பட்டன. 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிவறை, சாய்வுப்பாதை வசதிகள் ஏற்படுத்தப்படும்.வெளிப்படையான முறையில், நியாயமாக தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் மே 10-ம் தேதியுடன் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபவர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். பில் ஓக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.
3 மணி நேரம் பயணம் செய்து வருசநாடு வாக்குச்சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள் செல்கிறார்கள். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிக்கு செல்ல 3 மணி நேரம் பயணிக்க வேண்டும். 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் என்றார்.