தேசிய செய்திகள்

உளவுத்துறை ஊழியரை கொன்றவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ.

உளவுத்துறை ஊழியரை கொன்றவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

முசாபர்நகர்,

சமீபத்தில் டெல்லியில் வன்முறை வெடித்தது. அதில் கொல்லப்பட்டவர்களில், உளவுத்துறை ஊழியர் அங்கித் சர்மா என்பவரும் ஒருவர். அவரை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநிலம் காசாலி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. விக்ரம் சைனி கோரிக்கை விடுத்துள்ளார்.

அங்கித் சர்மாவை கொன்றவர்களை ரோட்டில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று மற்றொரு பா.ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறியதை ஆதரிப்பதாகவும் விக்ரம் சைனி கூறினார்.