திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் சில மணி நேரமும், இலவச தரிசனத்தில் பலமணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 777 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரத்து 209 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 70 லட்சம்.
திருமலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரி சனம் செய்ய 15 முதல் 18 மணி நேரம் வரை ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.