பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பல்லாரி (மாவட்டம்) டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனி யார் பி.யூ. கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தாவரவியல் பேராசியராக பணியாற்றி வந்தவர் ரவிகிரண் (வயது 42). இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2025-ம் ஆண்டு, பல்லாரியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இந்த கல்லூ ரியில் முதலாம் ஆண்டு தாவரவியல் படிப்பில் சேர்ந்தார்.
பின்னர் அந்த மாணவிக்கும், பேராசிரியர் ரவிகிரணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரவிகிரண் சிறுமிக்கு படிப்பு மற்றும் குடும்ப விவகாரங்களிலும் உதவி செய்துள்ளார். இதனால் ரவிகிரண் சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் மாணவியும், பேராசிரியரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் ரவிகிரண் தனக்கு திரு மணம் ஆனதை மறைத்து, மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த் கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, உல்லாசம் அனுபவித்து உள்ளார்.
இந்த நிலையில் ரவிகிரணுக்கு திருமணமாகி, குழந்தைகள் இருப்பது குறித்து மாணவிக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியரிடம், மாணவி கல்லூரியில் வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரவிகி ரண், தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், உல்லாசத்துக்கு மாணவியிடம் பழகியதாகவும் கூறியுள்ளார்.
இதன் விளைவாக மனமுடைந்த மாணவி சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அப்போது சிறு மியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் பல்லாரி மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி பேராசிரியர் ரவிகிரணை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.