திருவனந்தபுரம்,
திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்ட ரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.
நாளை(செவ்வாய்கிழமை) முதல் 28-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 26-ந் தேதி திருவோண தினத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.