image credits: AI 
தேசிய செய்திகள்

ஏஐயால் நடந்த மாற்றம்: வேலைவாய்ப்புத்திறனில் முதல் இடத்தில் உள்ள படிப்பு எது தெரியுமா?

இந்தியாவில் வேலைவாய்ப்புத்திறனுடன் கூடிய படிப்பு களில் கணினி அறிவியல் படிப்பு முதல் இடத்தில் உள்ளது. ஏ.ஐ. வந்த பிறகு மேலாண்மை படிப்பை பின்னுக்கு தள்ளியது.

தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தரவு பகுப்பாய்வு (டேட்டா அனலிட்டிக்ஸ்) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால், மேலாண்மை படிப்பை பின்னுக்கு தள்ளி கணினி அறிவியல் துறை முதலிடத்தை பிடித்துள்ளது.

வேலைவாய்ப்புத்திறன்

உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள், தாங்கள் படிக்கும் படிப்புக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்பதை முதன்மை காரணியாக வைத்தே பாடப்பிரிவுகளை தேர்வு செய்கின்றனர்.அந்தவகையில், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்புத்திறனில் மேலாண்மை படிப்பே (எம்.பி.ஏ.) முதலிடத்தை வகித்து வந்தன. ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தரவு பகுப்பாய்வு (டேட்டா அனலிட்டிக்ஸ்) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால், மேலாண்மை படிப்பை பின்னுக்கு தள்ளி கணினி அறிவியல் துறை முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள 'இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட்' அறிக்கை இதனை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

கணினி அறிவியல் படிப்பு

கணினி அறிவியல் படித்து முடிக்கும் 100 பேரில் 80 பேர் (80 சதவீதம்) நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்புத்திறனுடன் தயார் நிலையில் உள்ளனர்.கணினி அறிவியலுக்கு அடுத்த இடத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), மேலாண்மை படிப்பு (எம்.பி.ஏ.) என்ஜினீயரிங் (பி.இ., பி.டெக்.) போன்ற படிப்புகள் வேலைவாய்ப்பு திறனுடன் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.மொத்தத்தில் வெறும் பட்டப்படிப்பை விட தரவு பகுப்பாய்வு, டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் நடைமுறை திறன்கள் கொண்ட பட்டதாரிகளுக்கே இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் அதிக வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

SCROLL FOR NEXT