புது டெல்லி,
டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில், எதிர்க்கட்சிகளின் பெண்கள் விரோத அரசியலுக்கு எதிராக நாங்கள் அனைவரும் கருப்பு பட்டைகளை அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம்.
பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், நாட்டின் மகள்களை தேச நிர்மாணத்தில் ஈடுபடுத்துவதற்காக நாரி சக்தி திட்டத்தை முன்வைத்துள்ளார். ஆனால் சில கட்சிகள் இந்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை கூட குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து, பெண்களின் உரிமைகளை எதிர்ப்பதில் சிறிதும் தயக்கம் காட்டவில்லை.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்த நாடாளுமன்ற கட்சிகளின் வாதங்களுக்கு பின்னால் உறுதியான அடிப்படை எதுவும் இல்லை; பெண்கள் விரோத மனப்பான்மை மட்டுமே தெளிவாக தெரிந்தது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்த தலைவர்களிடமிருந்து அவர்களின் பகுதிகளில் உள்ள நமது சகோதரிகளும் மகள்களும் பதில்களை சொல்வார்கள். இப்போது நாடு மாறிவிட்டது நாரி சக்தி எதிர்பார்ப்புடன் காத்திருக்காது, அது தனது உரிமைகளை கோரும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.