புதுடெல்லி,
இந்தியாவில் அடுத்த தலைமுறை பயணிகள் பயணத்தை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, 2026 மத்திய பட்ஜெட்டில் 7 புதிய அதிவேக ரெயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மும்பை-புனே, புனே-ஐதராபாத், ஐதராபாத்-பெங்களூரு, ஐதராபாத்-சென்னை, சென்னை-பெங்களூரு, டெல்லி-வாரணாசி மற்றும் வாரணாசி-சிலிகுரி ஆகிய வழித்தடங்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றன.
இந்த வழித் தடங்களை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கை கள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், இந்த வழித்தடங்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய பொருளாதார, தொழில்துறை மற்றும் கலாச்சார மையங் களை இணைக்கும் முக்கிய வளர்ச்சி இணைப்புகளாக இருக்கும் என்றும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
மேலும், இந்த 7 புதிய வழித்தடங்கள் பயணநேரத்தைக் குறைப்பதிலும், பயணிகளின் வசதியை மேம்படுத்துவதிலும், பிராந்திய பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் எனவும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித் துள்ளது. அதன் ஒரு பகுதியாக. ரெயில்வே வாரியத்தில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அதிவேக ரெயில் கழகம் லிமிடெட் அறிவுறுத்தியுள்ளது.