தேசிய செய்திகள்

பெண் வேடத்தில் வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

கியாஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை எடுத்து தப்பிச் சென்றனர்.

நகரி,

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் காந்தாரி மண் உலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலையோரம் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை நைட்டி அணிந்து பெண் வேடத்தில் வந்த மர்ம நபர்கள் கியாஸ் கட்டர் மூலம் உடைத்தனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை எடுத்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT