திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபமான கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தமிழக அரசு தீபம் ஏற் றவில்லை. அதன்பின், இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், ஐகோர்ட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் மேல்முறையீடு செய்தது. ஆனால், வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கார்த்திகை தீபத்திருநாளன்று (அதாவது நேற்று முன்தினம்) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது.மேலும், இந்த பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் அதிகாரியாக மதுரை மாவட்ட கலெக்டரை நியமித்தது. பாதுகாப்புக்கு தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்பு படையையும் அழைக்கலாம் என்றும் அறிவுறுத்தியது. அதற்கிடையில், 23-ந்தேதி மாலை,கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதனால், திருப்பரங்குன்றத்தில் பரபரப்பான சூழ் நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை கார்த்திகை தீபத்திருநாளன்று, திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வில்லை. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அர்விந்த் குமார், வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு முன் நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பா.கருணாகரனுடன் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங் கரநாராயணன், துரதிர்ஷ்டவசமாக இறுதியில் தீபம் ஏற்ற இயலவில்லை.
மாவட்ட கலெக்டர் என்ற முறையில் பின்பற்ற வேண்டிய அனைத்து நடவடிக்கை களையும் எடுத்துள்ளார். இடைக்கால உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய் துள்ளார். அதை பரிசீலிக்க வேண்டும்' எனமுறையிட்டார்
ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குரு கிருஷ்ண குமார், இந்து தர்ம பரிஷத் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெய் சுகின் ஆகியோர் 'இந்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும்' என்று கோரினர்.இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள் பார்க்கலாம் என்று குறிப்பிட்டனர். இதையடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. தீபம் ஏற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய இடையீட்டு மனு மீதான விசாரணையும் நாளை நடைபெற உள்ளது.