தேசிய செய்திகள்

வெளிநாட்டு வங்கிக்கணக்கு வைத்திருப்போர் கணக்கு காட்ட தேவையில்லை..ஆனால்- வருமான வரித்துறை அறிவிப்பு

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31-க்குள் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

புதிய திட்டம் அறிமுகம்

வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகள் தொடர்பான விவரங்களை இதுவரை வருமான வரிக் கணக்கில் தெரிவிக்காதவர்களுக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கும் வகையில், 'பாஸ்ட்-டிஎஸ்' (FAST-DS) என்ற புதிய திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ரூ.20 லட்சம் வரை சலுகை

இந்தத் திட்டத்தின்படி, வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் ரூ.20 லட்சம் வரை பணம் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை வருமான வரிக் கணக்கில் வெளிப்படுத்த வேண்டியதில்லை. அந்தப் பணம் முறையான வருமானத்தின் மூலம் கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு கணக்கு காட்டத் தவறியவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்துக்கு எச்சரிக்கை

அதேநேரத்தில், கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31-க்குள் அவற்றின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT