புதுடெல்லி,
டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் வீதியில் நடமாட தகுதியற்றவர் கள் என்று சிவசேனா கவுன்சிலர் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநிலம் கல்யாண்-தொம்பிவிலி மாநகராட்சி சிவசேனா கவுன்சி லர் ரமேஷ் மாத்ரே.
கடந்த ஜூலை 6-ந் தேதி, தானே நகரில் சாஸ்திரிநகர் ஆஸ்பத்திரியில் மாத்ரேவும், அவருக்கு நெருக்கமான சிலரும் நின்று பேசிக் கொண்டிருந் தனர். அப்போது. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் களும், ஊழியர்களும் தாமதம் செய்வதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக டாக்டர்களிடம் மாத்ரே கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட் டது. உடனே மாத்ரேவும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து டாக்டர் களை தாக்கினர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாத்ரேவுக்கு கடந்த ஜூலை 14-ந் தேதி தானே கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் அதற்கு மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இருப்பினும், ஆகஸ்டு 7-ந் தேதி, மாத்ரே உள்ளிட்டோருக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது டன், சில நிபந்தனைகளை விதித்தது.
இந்த நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரி, மாத்ரே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதுபோல், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் ஜாமீன் பெற தகுதியற்றவர்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-
டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தும் இத்தகைய நபர்கள் வீதியில் நடமாட தகுதியற்றவர்கள். நிலைமை படுமோசமாக போய்க் கொண்டிருக்கிறது. பால்கர் என்ற இடத்தில் அதே கும்பல் மீண்டும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
எனவே, இதுபோன்ற செயலை செய்ய மற்றவர்களை தடுக்கும்வகையில் நாம் செய்தி விடுக்க வேண்டும். மாநில அரசின் மனுவுக்கு 3 வாரங் களில் பதில் அளிக்குமாறு மாத்ரேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர். விசாரணையை 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.