தேசிய செய்திகள்

மூன்று மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் - சி.பி.எஸ்.இ.

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியில் தேர்வெழுத வேண்டிய அவசியமில்லை.

புது டெல்லி,

நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த மும்மொழிக் கொள்கையால் எந்த பிரச்சினையும் இருக்காது. மேலும், தற்போது 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களும், 10ஆம் வகுப்பு படிக்கும்போது, பொதுத் தேர்வில் மூன்றாவது மொழியில் பொதுத் தேர்வு எழுத தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மும்மொழிக் கொள்கை

பள்ளிகளில் 7 முதல் 9 வகுப்பு வரை தற்போது படித்து வரும் மாணவர்கள், மும்மொழிக் கொள்கையின் கீழ் அவர்கள் தற்போது தெரிவு செய்துள்ள மொழிப்பாட நடைமுறையையே 10-ஆம் வகுப்பு வரை தொடர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அனுமதித்துள்ளது. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், அவர்கள் ஏற்கனவே படித்து வரும் இரு மொழிக் கொள்கைப்படியே பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மூன்றாவது மொழியில் தேர்வெழுத வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.