தேசிய செய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ‘திலகர்’ விருது அறிவிப்பு

நாட்டின் பாதுகாப்புக்காக அவர் ஆற்றிய சிறந்த சேவையை பாராட்டி விருது வழங்கப்படுகிறது.

புனே,

திலகர் ஸ்மாரக் அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டிற்கான 'லோக்மான்ய திலகர்' விருது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக அவர் ஆற்றிய சிறந்த சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 1-ந் தேதி புனேயில் நடைபெறும் விழாவில் மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு அஜித் தோவலுக்கு விருதை வழங்கி கவுரவிக்கிறார். 81 வயதாகும் அஜித் தோவல், இந்தியாவின் மிக நீண்டகாலம் பணியாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.

SCROLL FOR NEXT