திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருசை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஒருநாள் உண்டியல் காணிக்கை மட்டும் ரூ.3 முதல் 4 கோடி பக்தர்கள் வழங்குவர்.
இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பக்தர் எம்.மகாதேவம்மா என்பவர் திருப்பதி ஏழுமலையானுக்கு 753 கிராம் எடையில் ரூ.94 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 7 தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கினார்.
கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் அந்தத் தங்க ஆபரணங் களை கோவில் செயல் அலுவலர் முத்தாடா. ரவிச்சந்திரா. கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.