தேசிய செய்திகள்

சூரிய கிரகணம் 2019: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13 மணி நேரம் தரிசனம் ரத்து

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மதியம் 2 மணி வரை நடை அடைக்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி,

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 11 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை நடை அடைக்கப்படுகிறது என்றும், கிரகணத்திற்கு பிறகு நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்படும். தொடர்ந்து நாளை மதியம் பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மார்கழி மாதம் பூஜைக்கு செல்லும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே இந்த அறிவிப்பினை கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

வியாழக்கிழமை காலை திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆாஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட ஆாஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னதானக் கூடமும் மூடப்பட உள்ளது.