தேசிய செய்திகள்

போக்குவரத்து அபராதத்தை மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கலாம்; சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை

விதிமுறைகளை மீறும் வாகனதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றன.

டெல்லி,

போக்குவரத்து அபராதத்தை மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கலாம், இல்லாவிட்டால் மின் இணைப்பை துண்டிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

இந்த விபத்துகளுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதிவேகப் பயணம், விதி மீறல்கள், போதையில் வாகனம் ஓட்டுதல், முறையான சாலைகள் இல்லாமை போன்றவை முக்கிய காரணங்களாகும்.

ஆகவே வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் வாகனதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றன.

முன்பு சம்பவ இடத்திலேயே போலீசார் அபராதத் தொகையை வசூலித்தார்கள். இப்போது மின்னணு தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு சிக்னல்களில் விதிமீறும் வாகனங்களுக்கு தானாகவே அபராதம் விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தாலும் அவற்றை பின்னர் செலுத்தும் முறை உள்ளது. ஆனால் பலர் அபராதத் தொகையை கட்டாமல் காலம் கடத்துகின்றார்கள்.

இந்தியா முழுவதும் ரூ.43 ஆயிரம் கோடி அளவுக்கு அபராதத் தொகைக்கான செலான்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுயே பணம் வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. ஆகவே இந்த தொகையை வசூலிக்க மாற்று ஏற்பாடுகளை கையாள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.

நீதிபதிகள் ஜெ.பி.பர்தி வாலா மற்றும் கே.வி.விஸ்வதாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கை விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

விதிமீறல் வாகனங்களுக்கு வெறுமனே செலான்களை மட்டும் வழங்குவது போதுமானதல்ல. அந்த அபராதத்தொகைகளை வசூலிப்பதுதான் மிக முக்கியம்.

யாராவது அபராதத்தைக் கட்ட மறுத்தால் அந்த தொகையை அவர்களது

வீட்டு மின் கட்டணத்துடன் சேர்க்கலாம். அதையும் கட்டத் தவறினால் வீட்டு மின் இணைப்பையே துண்டிக்கலாம். விதி மீறும் வாகனங்களை கருப்புப்பட்டியலில் சேர்க்கலாம். இ

தன் மூலம் அந்த வாகனங்களை விற்க முடியாமல் தடுக்கலாம். வாகனப் பதிவை புதுப்பிக்க தடை விதிக்கலாம். நகல் பதிவு சான்று வழங்குவதை நிறுத்தலாம். இவற்றை செய்து பாருங்கள். நமது நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய புதிய வழிகளை கையாள்வது நல்லது .

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT