உத்தர கன்னடா
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் பத்கல் பகுதியருகே வெங்கடபுரா ஆற்றுக்கு 14 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஆற்றில் இறங்கி சங்கு எடுக்கவும், சிப்பிகளை சேகரிக்கவும் செய்துள்ளனர். அப்போது ஆற்றில் திடீரென நீரோட்டம் அதிகரித்தது.
இதனால், அவர்கள் ஆற்றில் தள்ளாடியுள்ளனர். அவர்கள் கரைக்கு வருவதற்கு முன்பே நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக பத்கல் நகர போலீசார் அந்த பகுதிக்கு சென்று, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், அவர்களில் 10 பேர் ஆற்றுக்குள் மூழ்கி விட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது. சிலர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களை பத்கல் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் ஷிராலி நகரில் உள்ள சாரதாஹோல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.