தேசிய செய்திகள்

கேரளத்தில் சோகம்; கையில் அறுவை சிகிச்சை செய்த பெண் மரணம்

இதற்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைதான் காரணம் என அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம்

கேரளத்தில் கையில் அறுவை சிகிச்சை செய்த பெண் மரணம் அடைந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.

கேரளம் மாநிலம் திருவல்லா அருகே உள்ள வெங்கோட்டை முண்டுகுழி புதுப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் வித்யா (வயது 45). இவர் திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கையில் கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில் நேற்று வித்யா உயிரிழந்து விட்டார். இதற்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைதான் காரணம் என அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் சிகிச்சையின்போது வித்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT