கோழிக்கோடு,
கோழிக்கோடு மாவட்டம், பெருவண்ணமுழி உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை கூட்டம் கீழே இறங்கி வந்தது. தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், மேலும் யானை கூட்டத்தை விரட்ட பட்டாசுகளை வெடித்தனர்.
இதற்கிடையில், வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டியபோது, ஒரு யானை ஆக்ரோஷமடைந்து அதிகாரிகளை துரத்தியது. அந்த யானையிடம் இருந்து தப்பிக்க அதிகாரிகள் ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர்.
கோபத்தில் இருந்த அந்த யானை அங்கிருந்த வீட்டின் கார் ஷெட்டை சேதப்படுத்த முயன்றபோது, ஷெட்டின் இரும்பு தூண் அதன் நெஞ்சு பகுதியில் ஆழமாக பாய்ந்தது. வலியால் துடித்த யானை சிறிது தூரம் சென்று நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.