தேசிய செய்திகள்

ம.பி.யில் சோகம்: மரத்தின் மீது கார் மோதி 5 பேர் பலி

விபத்தில், தம்பதி, அவர்களுடைய 8 வயது மகன் உள்பட 5 பேர் பலியானார்கள். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

நர்மதாபுரம்

மத்திய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக காரை ஓட்டுநர் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.

மத்திய பிரதேசத்தில் தமியா பகுதியில் இருந்து மத்குளி பகுதியை நோக்கி சொகுசு கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது நர்மதாபுரம் மாவட்டம் அருகே எதிர்திசையில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அதனை இடித்து விடாமல் இருப்பதற்காக காரை ஓட்டுநர் திருப்பினார்.

தம்பதி, 8 வயது மகன்

ஆனால், அவருடைய கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், தம்பதி, அவர்களுடைய 8 வயது மகன் உள்பட 5 பேர் பலியானார்கள். 2 பேர் பலத்த காயமடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.