Photo Credit: Railway ministry (File) 
தேசிய செய்திகள்

ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணமா? அபராத கட்டணம் அதிரடியாக உயர்வு

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்தால் தற்போது டிக்கெட் கட்டணத்துடன் ரூ.250 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் தற்போது வசூலிக்கப்படும் 250 ரூபாய் அபராதம், ஜூலை 1 முதல் 500 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம். நாடு முழுவதும் தினமும் இயக்கப்படும் 13,000-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் 2.50 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில்வே சட்டம் 1989-ன் படி, உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் நிலையில், அந்த அபராதத் தொகையை 500 ரூபாயாக உயர்த்தி ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அபராதத் தொகை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.