தேசிய செய்திகள்

ஜெய்ப்பூரில் லாரி மோதி விபத்து: சாலையோரம் நின்றிருந்த தந்தை, 3 குழந்தைகள் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாலையோரம் நின்றிருந்த ஒரு குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் லாரி மோதிய விபத்தில் சாலையோரம் நின்றிருந்த தந்தை மற்றும் 3 குழந்தைகள் பலியாகினர்.

லாரி மோதி விபத்து

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாலையோரம் நின்றிருந்த ஒரு குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.

தந்தை, 3 குழந்தைகள் பலி

லாரி மோதிய வேகத்தில் அங்கிருந்த சாக்கடை மூடி உடைந்ததால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் சாக்கடைக்குள் விழுந்தனர். இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த தந்தை சந்திரபிரகாஷ் மருத்துவமனையில் பலியானார். தாய் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலையோரம் பலூன் வியாபாரம் செய்த குடும்பத்தினர்

இந்த விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேற்சொன்ன நபர்கள் சாலையோரம் பலூன் விற்று பிழைப்பு நடத்தி வந்தவர்கள் என தெரியவந்தது.