சென்னை
சர்வர் பிரச்சினை காரணமாக உலகளவில் டுவிட்டர் இணையதளம் முடங்கியுள்ளதால் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டுவிட்டரில் இன்று காலை முதலே டுவீட்களை போஸ்ட் செய்வதிலும் டைம்லைன் தகவல்களைப் பார்ப்பதிலும் பயனாளர்கள் நுழைவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.சர்வர் செயலிழப்பு காரணமாக 40- ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டுவிட்டர் இணையத்தில் தகவல்களை போஸ்ட் செய்தால் 'ஏதே தவறு நடந்துவிட்டது அல்லது மீண்டும் முயற்சிக்கவும் டுவீட் இப்போது ஏற்றப்படவில்லை என தகவல்கள் வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டுவிட்டர் நிர்வாகம் டுவிட்டரில் தகவல்களை போஸ்ட் செய்வதில் பிரச்சினை உள்ளது. இதனை நாங்கள் சரி செய்து வருகிறோம். நீங்கள் உங்கள் டுவிட்டர் கணக்கை விரைவில் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பாதிப்பு குறித்து டவுன்டெக்டர் வெளியிட்டு தகவலில் டுவிட்டர் இணையத்தை பயன்படுத்துவதில் சிக்கல் குறித்து இதுவரை 81- ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.