தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்!

உத்தரகாண்டில் ரிக்டர் 4.1 மற்றும் 2.8 அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தரகாண்டியன் சாமோலி பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

உத்தரகாண்டின் சாமோலி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 10.21 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.380 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.581 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

மீண்டும் நிலநடுக்கம் பதிவு

இந்த நிலையில், உத்தரகாண்டின் அதே பகுதியில் காலை 10.52 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT