புதுடெல்லி,
உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 10.32 மணியளவில் ரிக்டர் 3.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.088 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.902 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து, மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 10.46 மணியளவில் ரிக்டர் 2.6 அளவில் ஏற்பட்டது.