தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இரு நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 8 மற்றும் 9-ந்தேதிகளில் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் வருகிறார். ஆகஸ்ட் 8-ந்தேதி மாலை புதுச்சேரி செல்லும் அவர், கோரிமேட்டில் ஆகஸ்ட் 9-ந்தேதி நடைபெறும் புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் காவல் கொடி (President's Colour) வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார்.

இந்த நிலையில், அமித்ஷா வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT