ராஞ்சி,
ஜார்க்கண்ட்டில் இரும்பு உருக்கு ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த இரும்பு உருக்கு ஆலையில் இன்று ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது இரும்பு உருக்கு ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாசித்த 2 ஊழியர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்ட சக ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.