தேசிய செய்திகள்

வாடகை பிரச்சினை: ஆட்டோ டிரைவர் - பெண் பயணிகள் மோதல் - வைரல் வீடியோ

மோதல் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு,

வாடகை பிரச்சினை தொடர்பாக ஆட்டோ டிரைவர் - பெண் பயணிகள் மோதல் ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஹெச்எஸ்ஆர் லெ அவுட் பகுதியில் இருந்து நேற்று வாடகை ஆட்டோவில் 2 பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

மோதல்

ஆட்டோவில் பயணம் முடிந்த உடன் பெண் பயணிகளிடம் வாடகை பணத்தை தருமாறு ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார். அப்போது, பெண் பயணிகளுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் பயணிகளும், ஆட்டோ டிரைவரும் நடுரோட்டில் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதேவேளை, பயணத்திற்கான வாடகை தராமல் பெண் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஆட்டோ டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT