தேசிய செய்திகள்

இரு விமானங்கள் உரசி விபத்து.. மும்பையில் பரபரப்பு

ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானங்கள் ஒன்றுடன் ஒன்று லேசாக மோதிக் கொண்டன.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும், ஐதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய இண்டிகோ விமானமும் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது ஒன்றுடன் ஒன்று லேசாக மோதியது. இதில் விமானங்களின் இறக்கைகள் சேதம் அடைந்துள்ளது.

ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது, ஐதராபாத்தில் இருந்து தரையிறங்கி ஓடுபாதையில் வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் இறக்கையுடன் உரசியது. இதனால் இரு விமானத்திலும் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து விமானங்களிலும் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

மும்பை விமான நிலையத்தில் இன்று இரண்டு விமானங்கள் உரசிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர்: பா.ஜ.க. மூத்த தலைவர் கேம்சந்த் சிங் புதிய முதல்-மந்திரியாகிறார்

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது; சபாநாயகருக்கு ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

நாட்டின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை: பியூஸ் கோயல்

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு