தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 'ஒயிட் நைட் கார்ப்ஸ்' (White Knight Corps) படைப்பிரிவினர், காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் படையினர் இணைந்து நேற்றிரவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு மற்றும் இரு சூழ்ந்த பகுதிகளுக்கு நடுவே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

SCROLL FOR NEXT