தேசிய செய்திகள்

2027-ம் நிதியாண்டில் 2 சக்கர வாகன தொழில் 7-9 சதவீத வளர்ச்சி பெறும்: அறிக்கையில் தகவல்

ஒட்டுமொத்தத்தில் 2027-ம் நிதியாண்டில் 2.9 கோடி வாகனங்கள் உற்பத்தி இருக்கும் என அறிக்கை தெரிவிக்கின்றது.

புதுடெல்லி,

நாட்டில் 2027-ம் நிதியாண்டில் 2 சக்கர வாகன தொழில் 7-9 சதவீத வளர்ச்சி பெறும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதில், உள்ளூர் சந்தையானது தொடர்ந்து வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக இருக்கும் என்றும் ஜி.எஸ்.டி. விகிதம் சீரமைப்புக்கு பின்னர் போதிய அளவுக்கு மேம்படுத்தப்பட்ட உற்பத்தியும் காணப்படுவதும் இதற்கான காரணியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோன்று, ஏற்றுமதியும் தொடர்ந்து 3-வது ஆண்டாக, உள்ளூர் சந்தை விற்பனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சந்தையானது இந்த தொழிலின் மிக பெரிய அடிப்படையாக அமையும் என்றபோதிலும், அது மேம்படும் என்றும் அதிக எண்ணிக்கையிலான விற்பனையால் வருவாய் சீராக அதிகரிக்க கூடும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இதில், அதிக திறன் வாய்ந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தேவை அதிக அளவில் இருக்கும். இதுவும் வருவாய் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இந்த தொழிலில் ஒட்டுமொத்த அளவில் 95 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்ய கூடிய 6 வாகன தயாரிப்பாளர்களிடையே நடந்த ஆய்வின் முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, 2027-ம் நிதியாண்டில் உள்ளூர் விற்பனை 80 சதவீதம் என்ற விகிதத்திலும், ஏற்றுமதி 20 சதவீதம் என்ற விகிதத்திலும் இருக்கும் என்றும் ஒட்டுமொத்தத்தில் 2.9 கோடி வாகனங்கள் உற்பத்தி இருக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.