சென்னை,
தி.மு.க. எம்.பி. வில்சன் நிருபர்களிடம் கூறியதாவது:- உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக் கையை 3-ல் இருந்து 5 ஆக உயர்த்தப்போவதாக தெரிவித்திருந்தார். பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என அனைவரையும் நியமிக்க அரசியலமைப்பு சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது நம்முடைய மாநில உரிமை. இதை விட்டுவிடக்கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக மாநில உரிமைக்காக ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் சென்று நாங்கள் வென்று வந்திருக்கிறோம். அதற்கு மாறாக யு.ஜி.சி. உறுப்பினர்களை குழுவில் சேர்ப்பது மூலம் நமது பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மத்திய அரசு வசம் போய் விடும். இவ்வாறு அவர் கூறினார்.