தேசிய செய்திகள்

சிறுவனுடன் தகாத உறவு: பிரபல நடிகையின் சிகை அலங்கார நிபுணர் கைது

சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக பிரபல நடிகையின் சிகை அலங்கார நிபுணர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மும்பை,

தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிராடன் அலாஸ்டர் டிக்கி (வயது 42) என்பவர் கங்கனா ரனாவத்தின் சிகை அலங்கார நிபுணராக உள்ளார்.

இவர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடிகையின் சிகை அலங்கார நிபுணராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பிராடன் அலாஸ்டர் டிக்கி 10 ஆண்டுகளாக இந்தியாவில் பல திரையுலக பிரபலங்களுக்கு சிகை அலங்கார நிபுணராக இருந்து உள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களுக்கு முன் மராட்டிய மாநிலம் ராய்காட் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவருடன் பிராடன் அலாஸ்டர் டிக்கியும் சென்று இருந்தார்.

அப்போது அவர் ஒரு சிறுவன் ஒருவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கார் பகுதி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பிராடன் அலாஸ்டர் டிக்கியை அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுவன் கார் பகுதியில் வசித்து வருகிறான். சம்பவத்தன்று நள்ளிரவு சிறுவனின் அறையில் இருந்து பிராடன் அலாஸ்டர் டிக்கி வெளியே வந்துள்ளார். இதை பார்த்த சிறுவனின் தாய் அவனிடம் விசாரித்துள்ளார். அப்போது, அவர் சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

சிறுவனின் தாய் அளித்த புகாரின்பேரில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்