தேசிய செய்திகள்

ரூ.77 ஆயிரம் கோடியில் 5 திட்டங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

உரங்கள் மீதான ஊட்டச்சத்து மானிய விகிதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கூட்டத்திலும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டத்தி லும் சுமார் ரூ.77 ஆயிரம் கோடி மதிப்புக்கு 5 ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. முக்கியமாக பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் மீதான ஊட்டச்சத்து மானிய விகிதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

நடப்பு சம்பா பருவத்துக்கான (1-10-2026 முதல் 31-3-2027 வரை) மானிய விகிதங்களுக்கு இந்த ஒப்புதல் பொருந்தும் என மந்திரிசபை ஒப்புதல் அளித்தது குறித்து செய் தியாளர்களுக்கு விளக்கி ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.62,370.02 கோடியாகும். இது கடந்த ஆண்டின் சம்பா பருவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ.24,417.73 கோடி கூடுதல் ஆகும்.

மற்றொரு முக்கிய ஒப்புதலாக 'ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2031 மார்ச் 31 வரை தொடர மந்திரிசபை அனுமதி அளித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.4,111 கோடி ஆகும். மந்திரிசபை கூட்டத்தில் நொய்டா மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் நொய்டா செக்டர் 51-ல் இருந்து செக்டர் 4 வரை 8.4 கி.மீ. தொலைவுக்கு 5 மேம்பால நிலையங்களுடன் விரைவு மெட்ரோ ரெயில் வழித்தடத்தை நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான திட்டச்செலவு ரூ.2,390 கோடி ஆகும்.

ரூ.3,230 கோடி மதிப்பில் டெல்லி நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் பகுதியில் யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகம் அமைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

SCROLL FOR NEXT