புதுடெல்லி,
சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடி மதிப்பீட்டில் 2-வது சரக்கு முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை காமராஜர் துறைமுகத்தில் இரண்டாவது சரக்கு முனையம் அமைக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எண்ணூர் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் ஆண்டுக்கு 2 மில்லியன் கண்டெய்னர்களை கையாளும் விதமாக சரக்கு முனையம் அமைக்கப்பட உள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (25.11.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
முதலாவது:-
‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டத்தின் கீழ், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பானது. இதன்கீழ், கிரேன்கள் மற்றும் புல்டோசர்கள் போன்ற பெரிய இயந்திரங்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள், துணை அமைப்புகளை இந்தியாவிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது:-
தமிழ்நாட்டில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் இரண்டாவது சரக்கு முனையத்தை (container terminal) உருவாக்குவது தொடர்பானது.
மூன்றாவது:-
அசாமில் உள்ள சில்ச்சார் அருகே டோலு (Dolu) பகுதியில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கிறது.
நான்காவது மற்றும் ஐந்தாவது:-
தபால் துறையுடன் தொடர்புடையவை. இதன்கீழ், தபால் செயல்பாட்டுத் திட்டம் (Postal Operations Scheme) மற்றும் தபால் துறையின் சொத்து மேலாண்மைத் திட்டம் (Asset Management Scheme) ஆகியவற்றை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.