தேசிய செய்திகள்

இந்தியா கூட்டணிக்கு போட்டி: நிதின்நபின் தலைமையில் பாஜக பேரணி

டெல்லியில் பாஜகவினர் போட்டி பேரணி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் இன்று 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி நடத்தினர்.

இந்தியா கூட்டணிக்கு போட்டியாக பாஜக இன்று அரியானாவின் ரோக்தக் பகுதியில் பேரணி நடந்தது.

டெல்லியின் ஹரி நகரில் தொடங்கிய பாஜகவின் இந்த பேரணி திலகர் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் நோக்கி சென்றது. மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த பேரணிக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமை தாங்கினார். டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் இதில் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் பரப்பும் தவறான தகவல்கள், பிரசாரங்கள் மற்றும் திட்டமிட்ட குழப்பத்திற்கு எதிராக இந்த பேரணி நடபெறுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேரணியில் சீக்கியர்கள் ஏராளமாக பங்கேற்றனர். அனைவரும் கருப்பு பட்டை அணிந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 1984ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சீக்கியர் இனப்படுகொலை நடந்தது. இன்று நவம்பர் 1ம் தேதியாகும். இதனால் சீக்கிய படுகொலை துயர நாளையொட்டி பாஜகவினர் இந்த பேரணி புறப்பட்டனர்.

இந்த பேரணியின்போது சீக்கிய இனப்படுகொலைக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஒருபக்கம் காங்கிரஸ் கட்சியினரின் பேரணி, இன்னொரு பக்கம் பாஜகவினரின் பேரணி என்பதால் இன்று மொத்த டெல்லியும் முடங்கியது. பல முக்கிய மார்க்கெட் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக கடைகள் அடைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT