தேசிய செய்திகள்

பெல்ஜியம் நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் அரசு முறை பயணம்

பெல்ஜியம் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

புதுடெல்லி

மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பெல்ஜியம் நாட்டுக்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதி மற்றும் துணை ஜனாதிபதியான கஜா கல்லாஸின் அழைப்பின்பேரில் அவர் இன்று பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு செல்கிறார்.

அவர் அந்நாட்டில் நடைபெறும் வெளிவிவகார கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகளுடன் உரையாடுவார்.

இதன்பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மற்றும் பெல்ஜியம் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

சமீபத்தில் 16-வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நடந்தது. இந்த சூழலில், அவருடைய பயணம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் கூட்டாண்மையை இன்னும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.