புதுடெல்லி,
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்கிறார். மில்வாகீ நகரில் நாளை முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை நடக்கும் ஜி-20 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
மேலும், இந்திய-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதுதொடர்பான இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வார் என்று வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.