தேசிய செய்திகள்

டிச. 18-ந் தேதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுவை வருகை

புதுவை பல்கலைக்கழகம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுவை வருகிறார்.

பட்டமளிப்பு விழா

காலாப்பட்டில் புதுவை மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 31-வது ஆண்டு பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுடன், பல்கலைக்கழகத்தின் 40 ஆண்டுகள் கல்விச் சிறப்பு கொண்டாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்

இந்த நிலையில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் டெல்லி சென்று ஜனாபதி திரவுபதி முர்முவை சந்தித்து புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர் புதுவை பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்த உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.

ஏற்பாடுகள் தீவிரம்

புதுவை பல்கலைக்கழகம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதுவை பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் துணை ஜனாதிபதி பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம்.

முன்னதாக, 2019-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT