தேசிய செய்திகள்

ஆக்ராவில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ககரோல் பகுதியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது.

ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ககரோல் பகுதியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து மீட்புப்படையினர் விரைந்து வந்தனர்.

இடிபாடுகளுக்குள் இருந்து 9 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் 3 முதல் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.